1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chenani high court rejected the vijay case

விஜயின் சொத்து மதிப்பு!.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!...

vijay
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. முதல் நிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் விஜயின் அரசியல் கட்சிக்கு வாக்களித்ததாக சொல்லப்படுகிறது.

அநேகமாக இந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 20 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்கும் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். அப்போது வேட்புமனுவில் அவர் தனது சொத்து விபரங்களை குறிப்பிட்டார்.

அதில் தனது தந்தை, தாய், மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள் எல்லோருக்கும் அவர் கடன் கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. குறிப்பாக மனைவி சங்கீதாவுக்கு 12.6 கோடி கடன் அவர் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.‘பெற்றோர்களுக்கும், மனைவி குழந்தைகளுக்கும் கொடுப்பதை கடன் என்று சொல்வார்களா?’ என்று பலரும் விஜய் மீது சேறை வாரி இரைத்தார்கள்..

இது பற்றி விளக்கமளித்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘விஜய் எங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். எந்த இடத்திலும் கடன் என்று குறிப்பிடவில்லை.. விஜயை பிடிக்காதவர்கள் வேண்டுமென்று இப்படி மாற்றி செய்தியை பரப்புகிறார்கள். எனக் கூறியிருந்தார். ஒருபக்கம் விஜய் தனது மனைவிக்கு 12.6 கோடி கடன் கொடுத்தது பற்றியும், பல தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் தொகையை கடனாக கொடுத்தது கொடுத்தும் சந்தேகங்கள் இருப்பதால் அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் என ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அடுத்த கட்டுரையில்
பேஸ்புக்கில் வந்த விளம்பரம்!. ரூ.299 பொருளுக்கு ஒரு லட்சத்தை இழந்த பெண்!...