புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 ஜூலை 2022 (20:35 IST)

தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நாளை முதல் வரும் ஜூலை 14 ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை தமிழ் நாடு, புதுச்சேரி, ஓரிரு இடங்களில் லேசானமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,நாளை மறு நாள் கன்னியாகுமரி, திரு நெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய பாடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.