திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (22:10 IST)

தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

rice
தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
அதுமட்டுமின்றி இன்னும் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
உக்ரைன் - ரஷ்யா  போர் காரணமாக கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல வட இந்தியர்கள் அரிசியை பயன்படுத்துவதால் அரிசி விலை அதிகரித்துள்ளதாகவும்  கூறப்படுகிறது 
 
தற்போது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது இன்னும் ஐந்து ரூபாய் வரை விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்