1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (18:38 IST)

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தின் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்குத் திசைக்காற்றும் மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் குதி நிலவுகிறது.

இதனால், இன்று முதல் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்,ஆகிய பகுதிகளில்  ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும், ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.