காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்- கலெக்டர் உத்தரவு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காரைக்காலைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு,புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த மருத்துவர்கள், இணை நோய்கள் அவருக்கு இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில், கடந்த 4 நாட்களில் 20 க்கும் அதிகமானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் ஒன்றரை ஆண்டிற்குப் பின் கொரொனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.