புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (09:46 IST)

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளது.

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்யும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K