வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (20:17 IST)

#கலைஞர்100 எல்லோருக்கும் பயனளிக்கும் ஆண்டு- முதல்வர் மு.க.ஸ்டாலின்

stalin
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம்.

மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – சொத்துரிமையும் பொருளாதார உரிமையும் அளித்த தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோர் கொண்ட இலட்சியத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்.

#கலைஞர்மகளிர்உரிமைத்_திட்டம் தேர்தல் அறிக்கையில் சொன்னோம்; இன்று தருமபுரியிலிருந்து தொடங்கி விட்டோம்.

தொப்பூர் முகாமில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வந்த சகோதரிகளுடன் உரையாடி, இந்தத் திட்டத்தால் அவர்கள் பெறப் போகும் பயன்களை அவர்கள் கூறக் கேட்டேன்; தன்னம்பிக்கை ஒளி அவர்களின் கண்களில் ஒளிர்ந்தது! அகம் மகிழ்ந்தேன்!

#கலைஞர்100 எல்லோருக்கும் பயனளிக்கும் ஆண்டு என்றேன். இந்தச் சாதனைச் சரித்திரம் தொடரும்!’’ என்று தெரிவித்துள்ளார்.