செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (12:01 IST)

ரூ.5000 பரிசு மற்றும் ‘நற்கருணை வீரன்’ சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு!

விபத்தினால் காயம் ஏற்பட்டவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு மற்றும் நற்கருணை வீரன் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
 சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து உயிரை காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்று நற்சான்றிதழ் அளிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தெரிவித்துள்ளார் 

மேலும் விபத்தினால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றும் நபருக்கு  5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள. முதல்வரின் இந்த  அறிவிப்புக்கு சட்டசபையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது