செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (21:32 IST)

விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.2 லட்சம் பரிசு அறிவித்த தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று,  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

உள்ளூர் தொழில் நுட்பம், புதிய இய ந்திரம் கண்டுபிட்ப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.