வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (11:03 IST)

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முறை தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்படும். ₹8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ₹381 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ₹8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

வேளாண்துறையில் சிறந்து விளங்கும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

விவசாய கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.