திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (19:36 IST)

தொலைக்காட்சி விவாதங்களில் இனி பங்கேற்க மாட்டோம்: எல் முருகன் அறிவிப்பு!

தொலைக்காட்சி விவாதங்களில் இனி பாஜக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டோம் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ் தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து விவாதம் நடக்கும் என்பதும் அந்த விவாதத்தில் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரசாரமாக நடைபெறும் இந்த விவாதம் சில சமயம் சர்ச்சைக்குள்ளாகும் உண்டு என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இனிமேல் டிவி விவாத நிகழ்ச்சியில் தற்காலிகமாக பங்கேற்க மாட்டார்கள் என பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர் மற்றும் நடிகருமான எஸ் வி சேகர் மூன்று வருடத்திற்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது என்றும், கால தாமதத்துடன் எடுத்தாலும் நல்ல முடிவு என்றும் தெரிவித்துள்ளார்