1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (13:15 IST)

நூலகங்களில் திமுக ஆதரவு நாளிதழ்களை வாங்க சொல்வதா? – எல்.முருகன் கண்டனம்!

தமிழக கிராமப்புற நூலகங்களில் முரசொலி நாளிதழ்களை வாங்க சொல்வதாக எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக விவசாய அணி சார்பில் முன்கள பணியாளர்களுக்காக தமிழக அரசியம் 1 லட்சம் முகக்கவசங்களை வழங்கும் திட்டத்தை சென்னை பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்பதாக சொன்ன திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தமிழக கிராமப்புற நூலகங்களில் முரசொலி உள்ளிட்ட திமுக ஆதரவு நாளிதழ்களை வாங்க வேண்டும் என அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.