நாளை முதல் 70 ரூபாய்க்கு தக்காளி விற்க வேண்டும்: மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தக்காளி விலை சில்லறை விலையில் 100 ரூபாய்க்கு அதிகமாகவும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை முதல் தக்காளி சில்லறை விற்பனை ரூபாய் 70 க்கு விற்க வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தக்காளி சில்லறை விற்பனை ரூ.100க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் ரூ.70-க்கு விற்க வேண்டும் என NCCF மற்றும் NAFED-க்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தக்காளி விலை குறைவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Edited by Siva