செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (20:21 IST)

தடுப்பூசி போட்டால்தான் பொதுஇடங்களில் அனுமதி- தமிழக அரசு

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு பொதுச் சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், பள்ளிகள்,கல்லூரிகள், கடைகள், சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சோதனைகள்செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.