1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cellphone thieves dead in accident

செல்போன் பறித்த திருடர்கள் அடுத்த நிமிடமே விபத்தில் பலி!

dead
சென்னையில் செல்போனை பறித்துக்கொண்டு மிக வேகமாக பைக்கில் சென்ற திருடர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி அருகே கார்த்திக் என்பவர் செல்போனை கையில் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார் 
 
அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 2 இளைஞர்கள் கார்த்திக்கின் செல்போனை பறித்து விட்டு அதிவேகமாக பைக்கில் தப்பிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
 
 இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செல்போனை பறித்து சென்ற ஒரு சில நிமிடங்களில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்
எல்.ஐ.சி ஐபிஓ: மூன்று மடங்கு குவிந்த விண்ணப்பங்கல்!