திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (18:19 IST)

தமிழகத்திலுள்ள 48 ஆலயங்களில் செல்போன் தடை: அமைச்சர் சேகர்பாபு

sekhar
தமிழகத்தில் உள்ள 48 ஆலயங்களில் செல்போன் தடை அமல்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டு அனைத்து கோயில்களிலும் செல்போன் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியபோது ஆலயங்களில் செல்போன் பயன்பாடு தடை குறித்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த நடைமுறை அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் செல்போன் தடையை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து விரைவில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran