1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (10:14 IST)

ருத்ரதாண்டவம் ஆடிய மாண்டஸ்: சென்னை சீறாவது எப்போது?

மின்வெட்டு இன்று மதியத்திற்குள் விநியோகம் செய்ய்ப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 
வங்கக்கடலில் உருவாகியு மாண்டஸ் புயல் நேறிரவு இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது. இதனால் வீசிய அதிவேகக் காற்றால், சென்னையில் பல இடங்களில் பிரம்மாண்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலின் போது வீசிய பலத்த காற்றின் காரணமாக சென்னை பேசின் பிரிட்ஜ், சென்னை கோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சென்னை விமான நிலையத்தில் நேற்றை போல இன்று 2வது நாளாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை முழுவதும் சுமார் 300 முதல் 400 மரங்கள், கிளைகள் விழுந்துள்ளன். சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் இந்த பணிகள் சீராக முடிக்கப்பட்டு சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதோடு மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வெட்டு இன்று மதியத்திற்குள் விநியோகம் செய்ய்ப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். எனவே தமிழகம் முழுவதும் இன்று மதியம் அல்ல மாலைக்குள் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்படும் என தெரிகிறது.