வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (16:18 IST)

செந்தில்பாலாஜி படித்த அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் கொண்டாட்டம்

செந்தில்பாலாஜி படித்த அரசு கலைக்கல்லூரியில் இனிப்புகள் வழங்கி  விளையாட்டுத்துறை மாணவர்கள் கொண்டாட்டம்
 
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட கரூர் வி.செந்தில்பாலாஜி, பதவியேற்றதை தொடர்ந்து அவர் படித்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டுத்துறை மாணவர்கள் சார்பாக, இயக்குநர் உடற்கல்வித்துறை ராஜேந்திரன் தலைமையில், மாணவர்கள் ஏராளமானோர் மற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

வெடி வைக்காமல், அரசு உத்திரவின்படி கொரோனா பரவலை தடுக்கும் விதிகளை பின்பற்றி, அரசு கலைக்கல்லூரியின் முன்புறம் ஏராளமான மாணவர்கள் சமூக இடைவெளி விட்டும், முகக்கவசங்கள் அணிந்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், இந்த அரசு கலைக்கல்லூரிக்கும், இந்த கல்லூரியில் பயின்ற மற்றும் பயிலும் மாணவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைச்சர் செந்தில்பாலாஜி முன் மாதிரியாக இருந்து வருவதாகவும், கரூருக்கு பெருமை இந்த கல்லூரிக்கு இவரால் பெருமை என்றும் மாணவர்கள் கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி இயக்குநர் உடற்கல்வித்துறை ராஜேந்திரன் உள்ளிட்ட விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.