சென்னையில் மீண்டும் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை- அதிர்ச்சி செய்தி!
சென்னையில் குறைந்துகொண்டே வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் கோரத்தாண்டம் படிப்படியாக குறைந்து வந்தது மக்கள் மனதில் அச்சத்தைப் போக்கியது. ஆனால் இப்போது தலைநகர் சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகமாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த மாதம் 1 ஆம் தேதி சென்னையில் 249 பேராக இருந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஜூலை 26 ஆம் தேதி 122 ஆக இருந்தது. ஆனால் 27 ஆம் தேதி எண்ணிக்கை 139 ஆகவும், ஜூலை 28 ஆம் தேதி 164 எனவும் அதிகமாகியுள்ளது. இதனால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக அகலவில்லை என்ற அச்சம் எழுந்துள்ளது.