தொடர்புடைய செய்திகள்
- ஜெ. மரணம் இயற்கையானது – டிடிவி திட்டவட்டம்!
- வேளாண் பயிர்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் தி.மு.க அரசு- டிடிவி. தினகரன்
- ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ஜெ.தீபா வலியுறுத்தல்
- ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஓபிஎஸ்!
- போலி வழக்கில் சிபிஐ என்னை கைது செய்ய திட்டம் - துணைமுதல்வர் சிசோடியா
நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சிபிஐ விசாரணை தேவை: டிடிவி தினகரன்
நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சிபிஐ விசாரணை தேவை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்த நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் இருக்கிறது என்றும் இந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என்றும் பல ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் அவரை எப்படி அந்த அறிக்கையை தயாரித்தார் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்
அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி உள்ளார் என்றும் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் மற்றபடி
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
