சாத்தான்குளம் விவகாரம்: கொலை வழக்காக மாற்றியது சிபிஐ
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்து அதிரடியாக முதலில் ஐந்து காவல்துறை அதிகாரிகளையும் அதன் பின்னர் ஐந்து காவல்துறை அதிகாரிகளையும் என மொத்தம் 10 பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தது
இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையின்படி இந்த வழக்கை ஏற்ற சிபிஐ தற்போது அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதும் சாத்தான்குளம் வழக்கை கொலை வழக்காக சிபிஐ மாற்றியுள்ளது
மேலும் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் நான்காவது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் இணைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
ஏற்கனவே சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக சிபிஐ மாற்றி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது