1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CBCID summon to Vijay in sankar encounter case

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சங்கருக்கு உதவி செய்த தரகர் விஜயா: சம்மன் அனுப்பிய சிபிசிஐடி

ரவுடி சங்கர்
கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கர், கடந்த செப்டம்பர் மாதம் 21 -ஆம் தேதி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பதும் இதுகுறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, தற்போது துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை 6 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சங்கருக்கு ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்துத் தர உதவிய விஜயா என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக தரகர் விஜயாவுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்பு அடையும் என எச்சரிக்கை: மீண்டும் ஊரடங்கா?