வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (08:26 IST)

கர்நாடகத்திலிருந்து வினாடிக்கு 1.77லட்சம் கனஅடி நீர் திறப்பு!

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.77 லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.77 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
 
இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதேபோன்று ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
கர்நாடகத்தில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, மக்களை பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.