செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 ஆகஸ்ட் 2021 (11:16 IST)

கிராம நிர்வாக அலுவலகத்தில் சாதி வெறி… அரசு ஊழியரை காலில் விழவைத்த வீடியோ!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தண்டல்காரரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சொத்து சம்மந்தமான விஷயத்துக்காக வந்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலகரான கலைச்செல்வி போதுமான ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை எடுத்துவர வேண்டும் என கூறவே அது சம்மந்தமாக கலைச்செல்விக்கும் கோபிநாத் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரான தண்டல்காரர் முத்துசாமி அரசு பெண் ஊழியரிடம் இப்படி எல்லாம் பேசக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் பட்டியலினத்தவர் என்பதால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கோபிநாத் தரப்பினர் அவரை மிரட்டி காலில் விழ வைத்துள்ளனர். இதை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகவே பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட வேண்டுமெனக் கூறியுள்ளனர்.