செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (12:41 IST)

சாத்தான்குளம் வழக்கு; சிபிஐ விசாரணைக்கு 3 நாட்கள் அனுமதி!

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களை விசாரிக்க சிபிஐ விசாரணை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடியினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் ஐந்து காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள 5 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது.

இதுகுறித்து முடிவடுத்த நீதிமன்றம் சிபிஐ கோரிய 5 நாட்களை வழங்காமல் மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிஅலியில் இந்த மூன்று நாட்களில் சிபிஐ கைதிகளை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று நடந்த சம்பவங்களை செய்து காட்ட சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.