ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (10:53 IST)

’விடுதலை’ படத்தை பார்க்க வாக்குவாதம் செய்த பெண் மீது வழக்கு..

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை தனது குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன் என்று வாக்குவாதம் செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர் 
 
’விடுதலை’ திரைப்படம் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில் இந்த படம் ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் பார்க்க அனுமதி இல்லை என திரையரங்கு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
 ஆனால் தனது குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் மக்களின் வலியை தனது குழந்தைகளுக்கு தான் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் வாக்குவாதம் செய்தார். இந்த நிலையில் ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட ’விடுதலை’ படத்தை தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி என்ற அந்த பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல் அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva