வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (14:36 IST)

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் விடுதலை…!

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து இன்று விடுதலை படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியானதில் இருந்து படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. படம் பார்த்த ரசிகர்களும், திரை பிரபலங்களும் படத்தைப் பாராட்டி சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இப்போது கூடுதலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை முதல் விடுமுறை நாட்கள் என்பதால் படத்துக்கு கூட்டம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.