திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (08:30 IST)

‘தேங்ஸ் மாமா’… ஏ ஆர் ரஹ்மான் வாழ்த்துக்கு பதிலளித்த பவானி ஸ்ரீ!

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படம் நாளை வெளியாகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக ஜி வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இதையடுத்து படம் ரிலீஸ் ஆவதை அடுத்து அவரின் தாய் மாமாவான ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதையடுத்து அவருக்கு பதிலளிக்கும் விதமாக பவானி ஸ்ரீ “தேங்ஸ் மாமா” என்று ட்வீட் செய்துள்ளார்.