ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (11:34 IST)

சித்தப்பான்னு கூப்ட்ற பொன்னுக்கு அனுப்புற வீடியோவா இது… வெளுத்துவிட்ட பெற்றோர்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சோமசெல்வ பாண்டி என்பவர் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆபாசப் படங்களை அனுப்பியதால் கோபமான பெற்றோர் அவரை அடித்து போலிசில் ஒப்படைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சோம செல்வ பாண்டி என்பவர் திமுகவில் மாவட்ட பொறுப்பாளராக இருந்துள்ளார். குடும்பத்தை விட்டு தனியாக வசித்த அவர் தனது அறைக்கு அருகே உள்ள மெஸ்ஸில் சாப்பிட்டு வந்ததால் அவர்களோடு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. மெஸ் வைத்திருந்த தம்பதியினரின் மகள் அவரை சித்தப்பா என்று அழைக்கும் அளவுக்கு குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.

ஆனால் சில நாட்களாக அவர் அந்த சிறுமியின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அதை பெற்றோரிடம் கூற அவர்கள் ஆத்திரத்தில் பாண்டியின் வீட்டுக்கு சென்று அவரை அடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.