1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (21:42 IST)

அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கை!

திருவனந்தபுரத்தில் சாட்டிங் செய்ததை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மா நிலம் சங்கரங்குளாம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது அண்ணன்(26) தன் பாலியல் பலாத்காரம் செய்தததாகப்  புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால்  இந்த வழக்கில் ச ந் தேகம் அடைந்தனர்.
பின்னர் தன்னை, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் சாட்டிங் செய்ய விடாததால் தனது அண்ணன் மீது புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து  நீதிமன்றம் அந்த இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.