வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (13:50 IST)

தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள்.! யாரை சொல்கிறார் ஜெயக்குமார்.?

Jayakumar
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ்,  ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். 

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று  6 மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் என்று கடுமையாக விமர்சித்தார்.  அவர்களை கட்சிக்குள் ஒருங்கிணைக்க இபிஎஸ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், ஒருங்கிணைப்பு என்ற மாயையை திரைக்கதை எழுதி, வசனமும் சேர்த்து யாரோ சிலர் பரப்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

 
என்னையும், இ.பி.எஸ்சையும் ஜெயலலிதா அடையாளம் காட்டியதாகவும், ஆனால் ஓபிஎஸ்சை, டிடிவி தினகரன் அடையாளம் காட்டியதாகவும் கூறினார்.  கோயிலாக பார்க்கப்படும் ஒரு கட்சி அலுவலகத்தை தாக்கி உடைக்கலாமா? என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.