1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (12:29 IST)

தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லை: ஜெயக்குமார் அறிவிப்பு..!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியதாகவும் இந்த சந்திப்பு சேலத்தில் நடந்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அதிமுகவை ஒருங்கிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் சேலம் ஈபிஎஸ் இல்லத்தில் 2 நாட்கள் ஆலோசித்ததாக பேசப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரன், ஓ.பி.எஸ், சசிகலா தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டை என ஜெயக்குமார் விமர்சனம்  செய்துள்ளார்.
 
சேலத்தில் நடந்ததாக சொல்லப்படும் 6 முன்னாள் அமைச்சர்கள், ஈபிஎஸ் சந்திப்பில் கட்சி ஒருங்கிணைப்பு வலியுறுத்தப்பட்டதாக தகவல் மூலம் ஒருங்கிணைப்பு என்ற மாயையை திரைக்கதை எழுதி, வசனமும் சேர்த்து யாரோ சிலர் பரப்புவதாகவும் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
 
சேலம் சந்திப்பு பற்றி இதுவரை அதிமுக தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வெளியாகாத நிலையில் முதல் முறையாக அது பற்றி ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran