1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (13:18 IST)

'பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்'.! ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன்! அண்ணாமலை..!!

Annamalai
தமிழ்நாட்டில் உள்ள பேய்களில் ஒவ்வொரு பேயாக விரட்ட வந்த வேதாளம் தான் நான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்ன செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மக்களை பிடித்த பீடைகள் போல பல பேய்கள் உள்ளன என்று தெரிவித்தார். அந்த பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன் என்றும் ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
ஒரே நேரத்தில் எல்லா பேய்களையும் ஓட்ட முடியாது என தெரிவித்த அவர், செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என நான் கூறியது உண்மை தான் என்று குறிப்பிட்டார். அவர் மீது நான் வைத்துள்ள விமர்சனத்திற்கான தரவுகளை வெளியிட்டிருக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

 
செல்வப்பெருந்தகை பற்றி நான் சொன்னது உண்மை என காங்கிரசை சேர்ந்த மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் தன்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும்,  புதிதாக வந்துள்ள தொண்டர்கள் ஊருக்கு 4 பேர் என் உருவ பொம்மையை எரிக்கின்றனர், அதனால் மகிழ்ச்சிதான் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.