ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (11:59 IST)

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Annamalai
தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று சு வெங்கடேசன் பாராளுமன்றத்தில் பேசியதற்கு பதில் அளித்த அண்ணாமலை மதுரை மேயருக்கு சு வெங்கடேசன் தான் செங்கோலை கொடுத்தார், அப்படி என்றால் அவர் அந்த மேயரை அடிமைப்படுத்தி இருக்கிறார் என்று அர்த்தமா? என்ற கேள்வி எழுப்பினார். நீங்கள் செங்கோல் கொடுத்தால் புரட்சி, பிரதமர் கையில் செங்கோல் வைத்திருந்தால் அது பழமை வாதமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
மேலும் திமுக நம்மை கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக வெங்கடேசன் பேசும் கருத்து கொஞ்சமும் ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தார். ஒரு பக்கம் இந்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் உருது பள்ளிகளை துவக்குவது தான் மாநில கல்வி கொள்கையா  என்றும் அவர் கூறினார்.
 
வாய் இருக்கிறது என்பதற்காக ராகுல் காந்தி என்ன வேண்டுமானாலும் லோக்சபாவில் பேச முடியாது என்றும் அதற்கு திமுகவில் உள்ள கொத்தடிமைகள் போலவே காங்கிரஸ் கட்சியிலும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
 
இந்துவை பற்றி பேச ராகுல் காந்திக்கு என்ன பாரம்பரியம் இருக்கிறது என்றும் இந்துக்கள் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran