1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. car driver saravanan surrendered in court

400 கோடி லஞ்ச புகார்!.. சரணடைந்த கார் டிரைவர்!.. அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா?!..

anbil magesh
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் புதுப்பிப்பது தொடர்பாக சான்றிதழ் கொடுப்பதற்கு கட்சி நிதி என்கிற பெயரில் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், சமீபத்தில் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அன்பில் மகேஷிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. ஒரு பக்கம் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகிறார். ஆனால் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என காவல்துறை கூறியதை ஏற்று அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்தான் 400 கோடி லஞ்ச விவகாரத்தில் கைதாகியுள்ள திமுக பிரமுகர் முத்துக்குமாரின் கார் ஓட்டுர் சரவணன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பள்ளிகளிடம் முத்துக்குமார் வசூலிக்கும் பணத்தை அன்பில் மகேஷின் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்தவர் சரவணன் என போலீசார் கூறுகிறார்கள். சரவணன் தலைமறைவாக உள்ளதால் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் போலீசார் கூறி வந்தனர். இந்நிலையில்தான் கார் ஓட்டுனர் சரவணன் சரண் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சமையல்காரரின் மாத வருமானம் சுமார் 1.05 லட்சம் ரூபாய்.. மனைவிக்கு ரூ.45 ஆயிரம்.. மாதம் ரூ.1.50 லட்சம்..