செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2018 (11:40 IST)

தீக்குளித்த கார் டிரைவர் மரணம்... போலீஸார் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன??

சீட் பெல்ட் அனியாத காரணத்தால் போலீஸார் அடித்ததால் மனமுடைந்த வாடகை கார் டிரைவர் மணிகண்டன் சாலையில் தீக்குளித்தார். இதனால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உயிரிந்துள்ளார். 
 
கடந்த 24 ஆம் தேதி சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள எஸ்ஆர்பி டூல்ஸ் சிக்னல் அருகே பயணித்துக்கொண்டிருந்த போது கார் டிரைவர் மணிகண்டன் சீட் பெல்ட் அணியததால் போலீஸார் அவரது காரை மடக்கி அடித்துள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனால் அவமானம் தாங்காமல் கார் டிரைவர் மணிகண்டம் சமபவ இடத்தில் தீக்குளித்தார். 58% தீக்காயங்களுடன் அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 
 
போலீஸார் வழக்கு பதிவு செய்தி இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகினறனர். இந்த வழக்கில் ஏற்கனவே, உதவி ஆய்வாளர் தாமரைசெல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது மணிகண்டன் மரமடைந்துள்ளதால் போலீஸார் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.