வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (16:48 IST)

சென்னையில் பரபரப்பு: சீட் பெல்ட் அணியாததால் அடித்த போலீஸ்; தீக்குளித்த டிரைவர்...

சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள எஸ்ஆர்பி டூல்ஸ் சிக்னல் அருகே பயணித்துக்கொண்டிருந்த போது கார் டிரைவர் சீட் பெல்ட் அணியததால் போலீஸார் காரை மடக்கி டிரைவரை அடித்துள்ளனர். 

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள எஸ்ஆர்பி டூல்ஸ் சிக்னல் அருகே அவரது வாடகை காரை போலீஸார் வழிமறித்துள்ளனர். கார் டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் காவல் துறையினா் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க முயற்சி செய்துள்ளனா். 

இதனால் ஓட்டுநருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது காவல்துறையினா் கார் டிரைவரை தாக்கியதாக தெரிகிறது. 
 
போலீஸார் தாக்கியதால் மனமுடைந்து அவமானத்திற்கு உள்ளாகிய டிரைவர் தீக்குளித்தார். பின்னர் உடனடியாக டிரைவர் கீழ்பாக்கம் மருத்துவனமனைக்கு கொண்டுவரப்பட்டார். 
 
தற்போது சிகிச்சையில் உள்ள டிரைவரின் தற்கொலை முயற்சிக்கு போலீஸார்தான் காரணம் என கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தீக்குளித்த டிரைவருக்கு 58% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், காவல் ஆணையர் இந்த சம்பவம் குறித்து கூறும் போது யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.