லட்சுமியா? தனலட்சுமியா? வேட்பாளர் பெயர் குழப்பம்! – வாக்குப்பதிவு நிறுத்தம்!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் வேட்பாளர் பெயர் குழப்பத்தால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி என்பவரின் பெயர் வாக்குச்சீட்டில் தனலட்சுமி என அச்சிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.