செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 மார்ச் 2021 (10:57 IST)

வேட்புமனு பரிசீலனையின்போது பேட்ஸ்மேன் வேடத்தில் சென்ற வேட்பாளர்!

வேட்புமனு பரிசீலனையின்போது பேட்ஸ்மேன் வேடத்தில் சென்ற வேட்பாளர்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்புமனுதாக்கல் முடிவடைந்து தற்போது வேட்புமனு பரிசீலனை நடந்து வருகிறது. நாளை வேட்பாளர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது சில பிரமுகர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நேற்று நாமக்கல் சட்டசபைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்று கொண்டிருந்தபோது கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடத்தில் சென்ற சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் என்பவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
அச்சு அசலாக கிரிக்கெட் பேட்ஸ்மேன் போலவே அவர் தனது கையில் பேட்,கிளவுஸ் மற்றும் ஹெல்மெட் ஆகியவைகளுடன் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது