1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டலா?

சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டலா?
தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை அடுத்து சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் என்பவர் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவரது விருப்பமனு ஏற்கப்படவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை அதிமுக தலைமை அறிவித்தது 
இதனால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த நிலையில் சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் 
 
அதில் அமைச்சர் தங்கமணியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மீண்டும் சீட் கிடைக்காததால் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவதால் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தங்கமணி மீது அதிமுக எம்எல்ஏ ஒருவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது