திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (16:26 IST)

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - நெல்லை சிறப்பு ரயில்.. முழு விவரங்கள்

Train
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் விடப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - நெல்லை இடையே நவம்பர் 8, நவம்பர் 15 மற்றும் நவம்பர் 22 ஆகிய மூன்று நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்றும் இந்த ரயில் மறுநாள் காலை 11 45க்கு நெல்லை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மறுமுனையில் நெல்லையிலிருந்து சென்னை சென்ட்ரல் இடையே வரை நவம்பர் 9, 16, 23 ஆகிய நாட்களில்  நெல்லையிலிருந்து மூன்று மணிக்கு கிளம்பி சென்னை சென்ட்ரலுக்கு முன் மறுநாள் அதிகாலை 3.45க்கு வந்த அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்றும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளதாகவும் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Edited by Mahendran