1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (21:53 IST)

கவர்னர் தனது முதலாளிக்கு வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்

pc sriram
கவர்னர் தனது முதலாளிக்கு வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்
தமிழக ஆளுனர் அவருடைய முதலாளிக்காக வேலை செய்கிறார் என பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி அவர்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
ஆளுநர் அரசியல்வாதி போல நடந்து வருகிறார் என்றும் அவருடைய முதலாளிகள் எப்படியாவது தேர்தலில் வெல்ல விரும்புகிறார்கள் என்றும் அந்த பயம் பற்றிக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அரசியல் உள்நோக்கத்துடன் பேசும் ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் நம்முடைய தேசப்பற்றை வரலாறு அறியும் என்றும் ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய் மொழியை அதிகம் நேசிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த பிரிவினை சக்திகளை சக்திகளை தேசிய அரசியலில் இருந்து விலகி வைப்பதற்கான வழியை இந்தியாவுக்கு தமிழ்நாடு காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva