1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (08:46 IST)

தளபதி 67 படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய், தற்போது குடும்பத்தோடு லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 3 ஆம் தேதிதான் இந்தியா திரும்புகிறாராம்.

இந்த படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நண்பன் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சாதான் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.