1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bengaluru Family Attempts to Courier Elderly Father for Social Media Reel

அப்பாவை சாக்கு மூட்டையில் கட்டி கொரியரில் அனுப்பிய இளம்பெண்.. ரீல்ஸ் மோகத்திற்கு ஒரு அளவே இல்லையா?

பெங்களூரு செய்திகள்
பெங்களூருவின் வியாலிகாவல் பகுதியில் சமூக வலைதள ரீல்ஸுக்காக முதியவர் ஒருவரை சாக்கு மூட்டையில் கட்டி கொரியர் செய்ய முயன்ற வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. 
 
ஒரு பெண்ணின் தலைமையில் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஒரு பெரிய மூட்டையுடன் கொரியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அந்த மூட்டையை பிரித்தபோது, உள்ளே அந்த பெண்ணின் தந்தை உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
பண்டிகை காலங்களில் பேருந்து டிக்கெட் கிடைக்காத அவலத்தை சித்தரிக்கவே இப்படி செய்ததாக அந்த குடும்பத்தினர் வாதாடியுள்ளனர். ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த அவர்கள், "நாங்கள் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம், இந்த பார்சலை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியது அனைவரையும் திகைக்க வைத்தது. 
 
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியதோடு, இனி இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்தனர். 
 
ரீல்ஸ் மோகத்தால் முதியவரின் உயிரையே பணயம் வைத்த இந்த செயல் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுக கூட்டணியில் திடீர் சிக்கல்.. ஆறு தொகுதியால் கூட்டணி உடையுமா?