புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (15:35 IST)

மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

cabinet ministry
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பெண்களின் வாழ்வாதாரத்தை  மேலும் உயர்த்தும் வகையில், மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதில், மாற்றுத்திறனாளி மகளிருக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட அம்சங்கள் மகளிர்  கொள்கையில் இடம்பெற்றுள்ளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்ட்டுள்ள நிலையில், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுததால 50 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்க மாநில கொள்கை வழிவகை செய்வதாகவும், 19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டம் விரிவுபடுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.