வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:29 IST)

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீதான புகார்... பிறப்புறுப்பில் மிதித்து கொடுமைப்படுத்தியதாக அதிர்ச்சி தகவல்

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண் துன்புறுத்தப்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பணிப்பெண்ணின் பிறப்புறுப்பில் காலால் மிதித்து கொடுமைப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில்  குழந்தைக்கு உணவு தாமதமானால்  கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், துணியில் சிறு கறை இருந்தால் கூட சரமாரியாக அடிப்பார்கள் என்றும் பச்சை மிளகாயை சாப்பிட சொல்லி துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது தாயை பார்க்க வேண்டும் என்று கேட்டபோதெல்லாம் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிதித்ததாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் துடைப்பதால் அடித்ததாகவும் ஜாதி பெயரை சொல்லி இழிவு படுத்தியதாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva