வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (13:35 IST)

நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு - முடித்து வைத்த நீதிமன்றம்.! என்ன பிரச்சனை தெரியுமா.?

Trisha
மதில் சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.  
 
சென்னை செனடாப் ரோடு இரண்டாவது வீதியில் தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில்  சுவரை  இடித்து கட்டுமானம்  மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு  நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, நடிகை திரிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 
 
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு  நீதிபதி டீக்காரமன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.   

 
இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.