வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (17:21 IST)

உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக இருக்கும்.! தமிழிசை விமர்சனம்..!!

Tamilsai
உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும்   என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார். 
 
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மக்களுக்கான திட்டம் என்று தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்க கூடியது என்றும் கூறினார்.
 
அமைச்சர் அன்பில் மகேஷ் பகுதியில் அரசு கொடுக்கும்  முட்டை வெளி கடைகளில் விற்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்த தமிழிசை, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக திடீர் வதந்தி கிளம்புகிறது என்று குறிப்பிட்டார்.
 
நல்ல நாள் இல்லாத காரணத்தினால் பதவி ஏற்க மாட்டார்கள் என்றும் காரணம் இவர்கள் பகுத்தறிவாளர்கள் என்றும், உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும் என்றும் தமிழிசை விமர்சித்தார். 

திருமாவளவன் எதிர் பார்த்தது நடக்கவில்லை என்றும் முதல்வரை பார்த்து திருமாவளவன் பயந்து வந்துள்ளார் என்றும் அவர் கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிக்க சென்று உள்ளதாகவும், பாஜகவில் பிரச்சனை இல்லை என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்தார்.