கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்
கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமாகி வருகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பிய பிரச்சினைக்கு எந்தவிதமான பதிலும் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மிக முக்கியம் என்றும், அனைத்து மதங்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதைப் பொருட்கள் எங்கு இருந்து எப்படிப் பரவுகிறது என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், போதைப்பொருள் விற்பனையாளர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக, நம் நாட்டின் இளைஞர்கள் போதைப் பொருளால் அதிகம் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva