செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (17:06 IST)

ஒமிக்ரான் பரவல்: முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் 
 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதனையடுத்து தற்போது 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான்  வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதேபோல் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி திட்டமிட வேண்டும் என்றும் இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் மத்திய மாநில சுகாதாரத் துறைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்